விவசாயிகள் மகிழ்ச்சி திருவெறும்பூர் அருகே சாலையில் ஓடைபோல் ஓடும் கழிவுநீர்

திருவெறும்பூர், மார்ச் 7: திருவெறும்பூர் அருகே தூர்வாரப்படாத வடிகால் வாய்க்காலால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் ஓடைபோல் சாலையில் ஓடுவதால் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூரில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே கக்கன் காலனி செல்லும் சர்வீஸ் சாலையோரம் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த கழிவுநீர் வடிகால் வாய்க்காலை திருச்சி மாநகராட்சி நிர்வாகமோ, நெடுஞ்சாலைத் துறையினரோ முறையாகப் பராமரிக்கவில்லை. இதன் காரணமாக அந்த கழிவுநீர் கால்வாயில் குப்பை கூளங்கள், மண் தேங்கி தூர்ந்துபோய் உள்ளது.

இதனால் அந்த பகுதியிலுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஓடுவதற்கு வழியின்றி திருவெறும்பூரில் இருந்து கக்கன் காலனி செல்லும் சாலையில் வழிதோடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் கழிவுநீர் சாலையில் ஓடாமல் இருப்பதற்கு கழிவுநீர் வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>