தனியார் கண் மருத்துவமனையில் நர்சிங் மாணவி மர்ம சாவு

திருச்சி, மார்ச் 7: புதுக்கோட்ைட மாவட்டம் இலுப்பூரை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி உமா (23). இவர் கடந்த 3 ஆண்டாக திருச்சி தென்னூரில் கண் மருத்துவமனையில் உள்ள 3வது மாடியில் தங்கியிருந்து நர்சிங் படிப்பு படித்து வந்தார். இதற்கிடையில், கடந்த 5 மாதத்திற்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ெமாட்டை மாடிக்கு சென்ற உமா, திடீரென மயங்கி விழுந்தார். இது குறித்து, அங்கிருந்தவர்கள், உமாவின் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். மேலும் மயங்கி விழுந்த உமாவை மீட்டு அப்பகுதியில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உமா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதை தொடர்ந்து, நேற்று காலை திருச்சி வந்த கணவர் மற்றும் உறவினர்கள், இறந்த உமா சாவில் மர்மம் இருப்பதாக கூறி மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்த தில்லைநகர் போலீசார் சம்பவயிடம் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என கூறியதையடுத்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>