×

தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

தொட்டியம், மார்ச் 7: தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கை குறித்து தினகரனில் வெளியிட்ட செய்தி எதிரொலியாக வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா வடுகப்பட்டி என்ற இடத்தில் காவிரி ஆற்றிலிருந்து காட்டுப்புத்தூர் ராஜவாய்க்கால் தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் வழியாக வரும் தண்ணீர் மூலம் 4,500 ஏக்கர் அளவிலான நிலங்கள் பயன் பெறுகிறது. குறிப்பாக வடுகப்பட்டி, உன்னியூர், மஞ்சமேடு, சின்ன பள்ளிபாளையம், காட்டுப்புத்தூர், காடுவெட்டி, நத்தம், பாலசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாய பாசன நிலங்கள் பயன்பெறும் நிலையில் வாய்க்காலில் தண்ணீர் வராமல் இருந்தது.

வாய்க்காலில் தண்ணீர்விட்டு ஒரு மாத காலம் கடந்த நிலையில் தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்படாததால் வாழை, வெற்றிலை, நெல் ஆகிய பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது. விவசாயிகள் இதனால் மிகுந்த கவலை அடைந்தனர். வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து தினகரனில் அண்மையில் செய்தி வெளியானது. இதையடுத்து ஆற்றுப்பாசன அலுவலர்கள் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்தனர். மேலும் செய்தி வெளியிட்டு விவசாயிகளுக்கு தீர்வு கிடைத்தற்கு தினகரன் நாளிதளுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தனர்.

Tags : Kattuputhur ,
× RELATED தாறுமாறாக ஓடிய போலீஸ் வேன் மோதி பெண் பரிதாப பலி: 2 பேர் படுகாயம்