மன்னார்குடி, முத்துப்பேட்டையில் தேர்தல் விதி மீறல் 12 பேர் மீது வழக்குப்பதிவு

மன்னார்குடி, மார்ச் 7: தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து, மன்னார்குடி சட்டமன்ற தொ குதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர் அழகர்சாமி உத்தரவின் பேரில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இந்நிலையில், மன்னார்குடி நகர காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி துண்டு பிரசுரங்களை விநியோகித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி முகமது இஸ்மாயில் (21), நெடுவாக்கோட்டை பகுதியில் அனுமதி யின்றி பிளக்ஸ் போர்டு வைத்திருந்த திமுக மெய்வண்ணன் (43), அதி முகவை சேர்ந்த ராமச்சந்திரன் (43), அமமுகவை சேர்ந்த அய்யா ஆறுமுகம் (52) காந்தி ரோடு பகுதியை சேர்ந்த மாயாண்டி (75) ஆகிய 5 பேர் மீது டவுன் எஸ்ஐ முருகன் வழக்கு பதிவு செய்தார்.அதுபோல், திருமக்கோட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட மெயின் ரோட்டில் உரிய அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் வைத்திருந்த அதிமுகவை சேர்ந்த புலவேந்திரன் ( 48), அமமுக நிர்வாகி சுரேஷ் (43) ஆகிய இருவர் மீது எஸ்ஐ பிரபு வழக்கு பதிவு செய்தார்.

அதுபோல் பரவாக்கோட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதியின்றி மைக் விளம்பரத்தில் ஈடுபட்ட அழகேஸ்வரன் (55) என்பவர் மீது இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிவு செய்தார். மேலும், தலையா மங்கலம் காவல் நிலையத்திற்குட்பட்ட மேலக்காடு பகுதியில் உரிய அனுமதி யின்றி பிளக்ஸ் போர்டுகள் வைத்திருந்த நாம தமிழர் கட்சி நிர்வாகி சத்திய பாமா (36) என்பவர் மீது எஸ்ஐ விஜயகுமார் வழக்கு பதிவு செய்தார். மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி இதுவரை 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தம்பிக்கோட்டை கீழக்காடு கூட்டுறவு வங்கி முன்பு அனுமதியில்லாமல் அதிமுக பேனர் வைத்ததாக அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் மகன் ரவி என்கிற கணபதி(40), அதேபோல் முத்துப்பேட்டை மன்னை சாலை ரயில்வே கேட் அருகில் மற்றும் கோசா குளத்தெரு பகுதியில் திமுக பேனர்வைத்ததாக திமுக ஒன்றிய பிரதிநிதி ஆறுமுக சிவகுமார்(45), அதேபோல் முத்துப்பேட்டை மங்கலூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஜான்பாண்டியன் கட்சி பேனர் வைத்ததாக மங்கலூர் வடக்கு தெருவை சேர்ந்த தர்மராஜ் மகன் மனோஜ்(22) ஆகிய 3பேர் மீது எஸ்ஐ திருக்குமரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>