பந்தல் அமைக்கும் பணி மும்முரம் 10 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் திருவாரூர் நீச்சல் குளத்தில் பயிற்சிபெற அனுமதி

திருவாரூர், மார்ச் 7: திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் வரும் 8ம் தேதி முதல் நடைபெறும் நீச்சல் பயிற்சியில் 10 வயது முதல் 65 வயதிற்குட்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருவாரூர் விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் தினசரி நீச்சல் பயிற்சியை துவங்குவதற்கு விதிமுறைகளுடன், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்த நீச்சல் பயிற்சியானது வரும் 8ம் தேதி முதல் துவங்கவுள்ள நிலையில் இதில் 10 வயது முதல் 65 வயதிற்குட்பட்டவர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.

அந்தவகையில் நீச்சல் பயிற்சிக்கு வரும் நபர்கள் உள்ளே நுழையும்பொழுது வெப்பமானி சோதனை செய்யப்படும். இதற்கொன தனிக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தனித்தனி உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். விளையாட்டு உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. பயிற்சிக்கு முன்பும், பின்பும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். விளையாட்டு பயிற்சிகளை பாதுகாப்பான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டும். நீச்சல் குளத்தில் 20 நபர்களுக்கு மிகாமல் சமூக இடைவெளி விட்டு பயிற்சிகள் அளிக்கப்படும்.

விளையாட்டு வளாகத்தில் சமூக இடைவெளியுடன் தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுதல், முகச்கவசம் அணிதல், நீச்சல் குளத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எச்சில் துப்பாமல் தூய்மையாக பயன்படுத்துதல் வேண்டும். இதற்கான வழிகாட்டுநெறிமுறைகள் பெயர் பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதனை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். சளி, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய தொந்தரவுகள் உள்ளவர்கள் விளையாட்டு மைதானத்திற்குள் நுழைவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நீச்சல் பயிற்சி என்பது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இதில் மாலை 5 மணி முதல் 6 வரை மகளிர் மட்டும் அனுமதிக்கப்படுவர். நீச்சல் பயிற்சிக்கு ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.50ம் ஜி.எஸ்.டி ரூ.9 என மொத்தம் ரூ.59 கட்டணமாக வசூலிக்கப்படும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண்.04366-290620 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Related Stories: