சென்னை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது; ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் யாராக இருந்தாலும், பெண்கள் பாதுகாப்பில் சமரசமில்லை; விசாரணை செய்து மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவிதமான அரசியல் தலையீடும் இருக்காது. அறிவியலுக்கு புறம்பான எந்த கருத்தும் பள்ளி மாணவர்களிடம் செல்லாது. மதம், சாதி சம்பந்தப்பட்ட அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்று அறிவுறுத்தல் வழங்கி உள்ளோம். சமூக நீதிக்கு மட்டும்தான் பள்ளிக்கூடங்களில் இடம். பிரிவினையை தூண்டக்கூடிய வேற்றுமை வளரக்கூடிய எதுவாக இருந்தாலும் பள்ளிகளில் இடமில்லை. ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சட்டம் கொண்டுவருவது தொடர்பாக ஆலோசித்து முதல்வர் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
