தேர்தல் அலுவலர் தகவல் திருத்துறைப்பூண்டி நகரில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 7: திருத்துறைப்பூண்டி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் வக்கீல் நாகராஜன் கலெக்டருக்கு அனுப்புயுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது. திருத்துறைப்பூண்டி நகர பகுதிகளில் சாலைகள் அகலமாக இல்லை.குறிப்பாக ரயிலடி, சாலை மேலவீதி, கடைத்தெரு, சன்னதி தெரு ஆகியவற்றில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பார்க்கிங் அனுமதி இல்லாத இடங்களில் பொதுமக்கள் நிறுத்தி விடுகின்றனர். பவ ஔஷதீஸ்வரர் சுவாமி கோயில் உள்ள சன்னதி தெருவில் கடைத்தெருவில் உள்ள அனைத்து வாகனங்களும் நிறுத்த ப்படுகின்றன.நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் வரைமுறை இல்லாமல் நிறுத்தப்படுவதால் பக்தர்களும் பொதுமக்களும் நடந்து கூட கோயிலுக்கு செல்ல இயலாமல்தடுமாற வேண்டிய நிலை உள்ளது.

இதற்கு காரணம் வங்கிகள், மளிகை கடைகள் வாகனங்கள் நிறுத்தும் இடவசதி அளிக்காமல் செயல்படுவதே காரணம்.நகர பகுதிகளில் போக்குவரத்து போலீசார் கடைவாசலில் நிறுத்தப்படும் வாகனங்களை மாலையில் ஒருபுறமும் காலையில் ஒருபுறமாக நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.மேலும் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்ய வசதி ஏற்படுத்தாத பெரும் கடைகளுக்கும் வங்கிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி குறிப்பிட்ட காலத்தில் வாகனங்கள் நிறுத்த தனி இடங்கள் ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும் தவறும் நிறுவனங்கள்மீது சட்டப்படி மூடிட மாவட்ட எஸ்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories: