8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் மாதம் பொதுத் தேர்வு

சென்னை: தனித் தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. 1.8.2026 அன்று பன்னிரெண்டரை வயது பூர்த்தி அடைந்த தேர்வர்கள் ஜூலை 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

தேர்வுக் கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.195ஐ பணமாகச் சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ஜூலை 9 மற்றும் 10ம் தேதிகளில் தேர்வுக் கட்டணத்துடன் தட்கல் விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.500 கூடுதலாகச் செலுத்திப் பதிவு செய்யலாம். தனித்தேர்வர்கள் ரூ.42க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட பின்கோடுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறை ஒன்றினை விண்ணப்பத்துடன் இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 17ம் தேதி தமிழ், 18ம் தேதி ஆங்கிலம், 19ம் தேதி கணிதம், 20ம் தேதி அறிவியல், 21ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது.

Related Stories: