357 வாக்குச்சாவடி மையங்கள்

மன்னார்குடி, மார்ச் 7: மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் அழகர்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தொகுதியில் 357 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் வசதி, தடையில்லா மின்வசதி, கழிவறை வசதி, சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆர்டிஓவுமான அழகர்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அதி காரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.ஆய்வின் போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தெய்வநாயகி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் இளங்கோவன், தபால் வாக்கு அலுவலர் ஜெயபாஸ்கர், ஆர்ஐ மாதவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வு குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் அழகர்சாமி கூறுகையில், மன்னார்குடி தொகுதியில் மொத்தம் 2,58, 433 வாக்காளர்கள் உள்ளனர். இவர் களுக்காக 357 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் 21வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என இதுவரை கண்டறியப் பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களில் கூடுதல் கண் காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், வாக்குச்சாவடி மைய ங்களில் குடிநீர் மற்றும் தடையில்லா மின்வசதி, கழிவறை, மாற்று திறனாளி களுக்கு சாய்வு தளம் போன்ற வசதிகள் செய்யப் பட்டுள்ளன. மேலும் , தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் 8, உதவி தேர்தல் நடத்தும் அலு வலகத்தில் 8, மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்கள் வைக்கும் 3 அறைகளில் 8 என மொத்தம் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது. இவ்வாறு தேர்தல் நடத்தும் அலுவலர் அழகர்சாமி தெரிவித்துள்ளார்.

Related Stories: