பேருந்து நிலையம் பின்புறம் சந்துப்பகுதியில் துர்நாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதி

கரூர், மார்ச்.7: கரூர் நகராட்சிக்குட்பட்ட பஸ் நிலையம் பின்புறம் சந்து பகுதியில் ஏற்படும் துர்நாற்றத்தால் சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் மூக்கைப்பிடித்து கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. எனவே அப்பகுதியை தூய்மையாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் பஸ் நிலையத்தின் பின்புறம் குடியிருப்பு மற்றும் வர்த்தக நிறுவனங்களை ஒட்டி செங்குந்தபுரம் பகுதிக்கு செல்லும் சந்து பகுதி உள்ளது. கரூர் பஸ் நிலையம் மற்றும் செங்குந்தபுரம் பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் இந்த சந்து பகுதியில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் சந்து பகுதியில் இரவு நேரத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதோடு, கழிப்பறை வளாகமாகவும் மாற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சந்து பகுதியில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கடும் துர்நாற்றம் வீசி வருவதால் இப்பகுதியினர் சிரமப்படுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே, சந்து பகுதியை தூய்மையாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: