வாலிபர் பலி குளித்தலை ரயில்வே கேட்டில் ஆபத்தான நிலையில் பட்டுப்போன மரம் உடனே அகற்ற மக்கள் எதிர்பார்ப்பு

குளித்தலை, மார்ச் 7: குளித்தலை ரயில்வே கேட்டில் ஆபத்தான நிலையில் பட்டுப்போன மரம் உள்ளது. இதனை அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை மணப்பாறை சாலையில் உள்ளது ரயில்வே கேட் இதன் வழியாக கரூர், திருச்சி, முசிறி, நாமக்கல், சேலம் மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் செல்கிறது. அதே போல் மதுரை திண்டுக்கல் மணப்பாறை மஞ்சம்பட்டி தரகம்பட்டி உள்ளிட்ட பகுதியில் இருந்து வருபவர்களும் வழியாக தான் வந்து செல்கிறது. மேலும் தினமும் விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள் வந்து செல்கின்றன. இதனால் அடிக்கடி ரயில்வே கேட் மூடும் சூழ்நிலையில் இருந்து வருகிறது. அப்போது சாலையின் இருபுறமும் 2 கிமீ அளவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் ரயில்வே கேட் அருகே பட்டுப்போன மரம் ஒன்று பல மாதங்களாக இருந்து வருகிறது.

இம்மரம் எந்நேரமும் ரயில் வரும் நேரத்திலோ அதிகமான காற்று அடிக்கும் நேரத்திலோ விழுந்தால் பெரும் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படும். அதனால் ரயில்வே நிர்வாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு பொதுமக்கள் நலன் கருதி விபத்து ஏற்படுவதற்கு முன் ரயில்வே கேட்டில் உள்ள பட்டுப்போன மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: