பெரியார் சிலையை மறைத்துள்ள துணியை அகற்றக் கோரி மனு

திருப்பூர், மார்ச் 7:  திருப்பூரில் பெரியார் சிலை துணியால் மறைக்கப்பட்டுள்ளது. துணியை அகற்றக் கோரி திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று திருப்பூர் மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து திராவிடர் கழகத்தினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி துணியால் மூடப்பட்டுள்ளது. திராவிடர் கழகத்தின் சார்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றத்தில் தந்தை பெரியாரின் சிலை தேர்தலின் போது மூடப்படக்கூடாது என்ற உத்தரவை பெற்றுள்ளோம். எனவே பெரியார் சிலையை மூடியுள்ள துணியை அகற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதில் மாவட்ட தலைவர் ஆறுமுகம், செயலாளர் ஆறுச்சாமி உள்ளோடோர் உடனிருந்தனர்.

Related Stories:

>