மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக் கூட்டம் மத்திய மாவட்ட திமுகவினர் திரளாக பங்கேற்க முடிவு

திருப்பூர், மார்ச் 7: திருச்சியில் இன்று மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் திருப்பூர் மத்திய மாவட்ட திமுகவினர் திரளாக பங்கேற்க முடிவு செய்துள்ளனர். திருப்பூர் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் ராஜாராவ் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மத்திய மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். தெற்கு தொகுதி பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன், வடக்கு தொகுதி பொறுப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திருச்சியில் திமுக சார்பில் நடைபெறும் (இன்று 7ம் தேதி) பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசுகிறார்.

இதில் திருப்பூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும். சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி 100 சதவீத வாக்குப்பதிவுக்கு முயற்சி எடுக்க வேண்டும். தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் வாக்குப்பதிவு செய்யலாம் என்பதால், வாக்குப்பதிவின் போது பல குளறுபடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மூத்த வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி முடிந்தளவு நேரடி வாக்குப்பதிவு செய்ய முயற்சி மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், 15 வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் ராமதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.,கோவிந்தசாமி, முன்னாள் மாநகர பொறுப்பாளர் மேங்கோ பழனிசாமி, வடக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: