நெம்மாராவில் ராணுவ வீரர்களின் கொடி அணிவகுப்பு

பாலக்காடு,மார்ச்7:சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாலக்காடு மாவட்டம் நெம்மாராவில் ராணுவ வீரர்களின் கொடி அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. கேரள மாநிலத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்,துணை ராணுவத்தினர் பாலக்காடு வந்தனர். இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு பதட்டம் நிலவக்கூடிய வாக்குசாவடி பகுதிகளிலும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு நிலவுவதாக கருதப்படும் பகுதிகளிலும், அமைதி காத்திட போலீசாரும், ராணுவ வீரர்களும் ஒருங்கிணைந்து கண்காணித்து வருகின்றனர்.

பாலக்காடு மாவட்டம் நெம்மாரா, ஒலிப்பாறை, அடிப்பெரண்டா டவுண், சந்திப்பு, பஸ் ஸ்டாண்டு ஆகிய இடங்களில் ராணுவ வீரர்கள், போலீசாரின் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள அட்டப்பாடி, நெல்லியாம்பதி, பரம்பிக்குளம் ஆகிய மலைவாழ் மக்கள் வசிக்கின்ற இடங்களில் அமைக்கப்படுகின்ற வாக்குசாவடிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர்.

Related Stories:

>