பறக்கும் படை சோதனையில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படம் பதித்த பென்சில் பெட்டிகள் பறிமுதல்

திண்டிவனம், மார்ச் 7: ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படம் பதித்த பென்சில் பெட்டிகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூரில் பறக்கும் படை அதிகாரி ஜான்சிராணி தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செஞ்சியில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படத்துடன் 3 அட்டை பெட்டிகளில் 640 பென்சில்கள் வீதம் 1920 பென்சில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், பள்ளிக்கல்வி துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு வநியோகம் செய்ய எடுத்து வந்தது தெரியவந்தது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் முன்னாள் முதல்வர் மற்றும் முதல்வரின் படத்துடன் எடுத்து செல்லப்பட்ட 1920  பென்சில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்துறை) பெருமாள் மற்றும் வட்டாட்சியர் செல்வம் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories:

>