பண்ருட்டியில் காரில் ஆவணமின்றி எடுத்து சென்ற ₹2.5 லட்சம் பறிமுதல்

பண்ருட்டி, மார்ச் 7: நெய்வேலி பறக்கும் படை தாசில்தார் ஆனந்தி, உதவி ஆய்வாளர் பாரி வள்ளல், தலைமை காவலர்கள் விபீஷ்ணன், ராஜாராம் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை கும்பகோணம் சாலை பணிக்கன்குப்பம் என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டியில் இருந்து வடலூர் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் காரில் எவ்வித ஆவணமும் இன்றி ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் பணத்தை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல் பண்ருட்டி பகுதியில் பறக்கும் படை தாசில்தார் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் புதுப்பேட்டை மெயின் ரோட்டில் நத்தம் என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த கார் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானது என தெரியவந்தது. மேலும் அந்த காரில் ரூ.1 லட்சம் பணத்தை எவ்வித ஆவணமும் இன்றி எடுத்து வந்ததால் அதனையும் பறிமுதல் செய்தனர். இந்த இரு பிரிவினர் பிடித்த பணத்தை பண்ருட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் மங்கலநாதனிடம்

ஒப்படைத்தனர்.

Related Stories: