×

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு

கோவை, மார்ச் 7: கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. டாக்டர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக 60 வயதானவர்கள் மற்றும் இணை நோயுள்ள 45 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி போடுவது தொடர்பாக முதியவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் சுகாதாரத்துைற அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதன்ஒருபகுதியாக, கோவை அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவுக்கு வரும் முதியவர்களிடம் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவர்களிடம், தடுப்பூசி போடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து டாக்டர்கள் எடுத்துரைத்து வருகின்றனர். இது குறித்து அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறுகையில்,``புறநோயாளிகள் பிரிவுக்கு சிகிச்சைக்காக வரும் முதியவர்களிடம் பயிற்சி மருத்துவர்கள் மூலம் கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, அவர்களின் விருப்பத்தின் பேரில் தடுப்பூசி போடப்படுகிறது. இதன்மூலம், தடுப்பூசி போடாத நபர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்’’ என்றார்.

Tags : Corona ,Coimbatore Government Hospital ,
× RELATED மீண்டும் விரட்டும் கொரோனா...