கராத்தே போட்டியை சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்த முயற்சி

கோவை, மார்ச் 7: தமிழ்நாடு கராத்தே சங்க தலைவர் சாய் புரூஸ் கோவை ஆடிஸ் வீதியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் கராத்தே போட்டியை வளர்க்க நிறைய மாற்றங்கள் செய்து கராத்தே பயிற்சியில் மாணவர்கள் இலவசமாக சேர்ந்து பயில அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை செய்து கொடுக்க முன் வந்துள்ளோம். போதிய நிதி வசதி இல்லாமல் தமிழகத்தில் பல கலைகள் அழிந்து வருகின்றன. பல மாணவர்கள் கராத்தே பயிற்சி மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். எனவே சங்கத்திற்கு பொருளாதார ரீதியில் உதவுபவர்கள் முன்வரலாம். கராத்தேயில் முறையான பயிற்சி அளித்து இதன் தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் கராத்தே விளையாட்டுத் துறையில் பல தங்கப்பதக்கங்கள் நம் தேசத்திற்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். சங்க செயலாளர் மோகன், ரெப்ரி கவுன்சில் அறிவழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories: