59 ஆண்டாகியும் தீரவில்லை வறுமை...

கோவை, மார்ச்.7: தமிழகத்தில் 59 ஆண்டாகியும் வறுமை கொடுமை தீரவில்லை. முதியோர் திட்ட முைறகேடுகளை தடுக்காததால் ஏழை மக்கள் விரக்தியடைந்துள்ளனர். பட்டினி சாவை தடுக்க, தனி மனிதனின் பசியை தீர்க்க சமூக பாதுகாப்பு  திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 1962ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தமிழகத்தில் முதிேயார் உதவித்தொகை திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. 59 ஆண்டாகியும் வறுமை, பசிக்காக உதவித்தொகைக்கு காத்திருப்போர் எண்ணிக்கை குறையவில்லை. ‘மக்களின் வறுமை தீர்க்க வந்த அட்சய பாத்திர திட்டம்’ எனவும், அரை வயிறு ேசாத்துக்கு அலைய வைக்கும் திட்டம் எனவும் சிலர் இந்த திட்டத்தை விமர்சித்து வருகின்றனர்.

அரை நூற்றாண்டு கடந்தும் மக்களின் வறுமை தீர்க்க அரசு எந்த முயற்சியும் எடுக்காமல் பெருமை பேசுவதாக விமர்சனம் குவிந்து வருகிறது. இந்த திட்டத்திற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு குறையாத நிலையில், பயனாளிகள் எண்ணிக்கை அடியோடு குறைக்கப்பட்டது சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாநில அளவில் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், மாற்று திறனாளிகள் உதவி திட்டம், தேசிய விதவையர் திட்டம், ஆதரவற்ற மாற்று திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதிய திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் திட்டம், 50 வயதான, திருமணம் ஆகாத, ஏழை பெண்கள் ஓய்வூதிய திட்டம், இலங்கை அகதிகளுக்கான உதவி திட்டம் என 9 வகையான திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் 50 சதவீத நிதி உதவி கிடைக்கிறது. இந்த திட்டங்களில் கடந்த 2011-2012ம் ஆண்டில் 26,45,537 பேரும், 2012-2013ம் ஆண்டில் 30,76,397 பேரும் பயன்பெற்றனர்.

கடந்த 2013-2014ம் ஆண்டில் 36,24,063 பேர் பயன் பெற்றனர். 2014-2015 ஆண்டு 31,15,777 பேரும், 2015-2016ம் ஆண்டில் 31,65,160 பேரும், 2016-2017ம் ஆண்டில் 29,20,030 பேரும், 2017-2018ம் ஆண்டில் 29,75,885 பேரும் பயனாளிகளாக இருந்தனர். கடந்த 2 ஆண்டாக பயனாளிகள் எண்ணிக்கை வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டது. நடப்பாண்டில் சுமார் 30.50 லட்சம் பேர் முதியோர் உதவி தொகை பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. வறுமை பாதிப்பை தடுக்காமல் பெரும்பாலான உண்மையான பயனாளிகளை நீக்கி விட்டு அ.தி.மு.க.வினரை இந்த பட்டியலில் சேர்த்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வருவாய்த்துறை ஆய்வில் இவர்கள் போலியான தகவல், ஆவணம் கொடுத்து உதவித்தொகை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிஜமாக பாதிக்கப்பட்ட ஏழை மக்களை பட்டியலில் இருந்து நீக்கி விட்டு, புதியவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதில் உள்நோக்கம் இருக்கிறது. கட்சி நிர்வாகிகள் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு உதவித்தொகை வழங்க, ஏற்கனவே உதவி பெறுபவர்களை நீக்கம் செய்வதாக தகவல், புகார் வந்தும் நடவடிக்ைக எடுக்கவில்லை. எந்த உதவியும் கிடைக்காத, எழுத படிக்காத தெரியாத அப்பாவி மக்கள் அரசிடம் போராடி உதவி பெற முடியாமல் குறை தீர்ப்பு முகாமில் புலம்புவது வாடிக்கையாகிவிட்டது. வறுமை ேகாட்டிற்கு கீழ் 1.21 கோடி பேர் வசிப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதில் 10 முதல் 15 சதவீதம் பேர் மட்டுமே உதவிதொகை பெற்று வருகின்றனர்.

Related Stories:

>