×

மகுதுப்பட்டியில் சிதிலமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

இலுப்பூர், ஜூன் 11: இலுப்பூர் அருகே உள்ள மகுதுப்பட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இலுப்பூர் அருகே உள்ள மதகுபட்டி சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இலுப்பூரில் இருந்து செல்லும் சாலையில் ஒன்றாக இதுவும் இருப்பதால் இச்சாலையை இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அந்த சாலையை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்ப காலத்தில் சிறுது சிறிதாக ஜல்லிகள் பெயர்ந்த நிலையில் இருந்த இச்சாலை காலப்போக்கில் சாலைகள் சேதம் அடைந்து கூண்டும் குழியுமாக மாறிவிட்டன.

இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க மிகவும் சேம பட்டு சென்று வருகின்றனர். அவசர காலத்தில் வேகமாக செல்ல முடியாத நிலை உள்ளது. இச்சாலையை மகுதுப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்து வருகின்றனர். பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கும் இச்சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

Tags : Maguthupati ,Ilupur ,Maguthupati road ,Madagupati road ,
× RELATED கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட...