×

அரியலூர் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எஸ்பி தொடங்கி வைத்தார்

அரியலூர், ஜூன் 11: அரியலூர் எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி அரியலூர் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாட்டினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளர், ஒரு பெண் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், பெண் தலைமை காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் என மொத்தம் 6 நபர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிபுரிவார்கள். மாணவர்களுடன் தொடர்பில் இருப்பார்கள். பெண்கள் அல்லது மாணவிகளுக்கு ஏதேனும் பிரச்னை என்று தகவல் கிடைத்தால் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விரைந்து சென்று பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு, எதிரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று மாவட்ட எஸ்பி தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது அரியலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் சாலை இராம் சக்திவேல் (அரியலூர் உட்கோட்டம்) சண்முகம்(சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்), அருள்முருகன் (ஆயுதப்படை) முன்னிலை வகித்தார்கள். காவல் ஆய்வாளர்கள் சட்டநாதன் அரியலூர், வெங்கடேசன் அரியலூர் போக்குவரத்து, சீனிவாசன் ஆயுதப்படை, போலீசார் உடனிருந்தனர்.

 

Tags : SP ,Lioness Special Task Force ,Ariyalur district ,Ariyalur ,Vishwesh Pa. ,Shastri ,
× RELATED தன்னார்வ குருதி கொடையாளருக்கு பாராட்டு