×

குற்ற தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

அரியலூர் ஜூன் 11: அரியலூர் மாவட்டம் வெங்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாக்கியநாதபுரம் கிராமத்தில், அரியலூர் போலீசார் சார்பில் கிராம குற்ற தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் அரியலூர் எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் நேற்று நடைபெற்றது. அரியலூர் டிஎஸ்பி சாலை ராம் சக்திவேல், கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட எஸ்பி பேசியதாவது:

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் குறித்தும், காவல் உதவி செயலில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும், போதை பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வும் ஏற்படுத்தினார். மேலும் சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கலாம், தகவல் அளிக்கு ஒரு ரகசியம் பாதுகாக்கப்படும் என்று எஸ்பி கூறினார். இக்கூட்டத்தில் கிராம விழிப்புணர்வு குழுவினர், பாக்கியநாதபுரம் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.

 

 

Tags : Crime Prevention Awareness Meeting ,Ariyalur ,prevention ,Ariyalur police ,Pakianathapuram ,Venganur police station ,SP ,Vishwesh Pa. Shastri ,DSP ,Salai Ram… ,
× RELATED தன்னார்வ குருதி கொடையாளருக்கு பாராட்டு