- சங்கரன் பந்தால்
- சென்னை
- தரங்கம்பாடி
- மயிலாதுதுரை மாவட்டம்
- ஆயப்பாடி முஜ்புர் ரஹ்மான் பொறையார்
- மயிலாடுதுறை…
தரங்கம்பாடி, ஜீன் 11: மயிலாடுதுறை மாவட்டம். சங்கரன்பந்தலில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஆயப்பாடி முஜ்பூர் ரஹ்மான் பொறையார் அரசு பேருந்து கிளை மேலாளரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டம், சங்கரன் பந்தலில் இருந்து திருக்களாச்சேரி, ஆயப்பாடி, பொறையார், சீர்காழி, சிதம்பரம் வழியாக சென்னைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும்.
மேலும் சென்னை – நாகைக்கு இடையே இயக்கப்படும் விரைவு பேருந்துகள் பொறையார் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டும். திருவாரூர், கும்பகோணத்திற்கு இயக்கபட்டு இடையில் நிறுத்தபட்ட அரசு பேரூந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
