நத்தம் அருகே ெதன்னை விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்

நத்தம், மார்ச் 7: மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு இளங்கலை மாணவர்கள் ஊரக பணி வேளாண்மை  அனுபவ திட்டத்தின் கீழ் தென்னை விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்  நத்தம் அருகே ராஜகோபாலபுரத்தில் நடந்தது. இதில் மாணவர்கள் தனுஷ், சிவ சதீஷ்குமார், சுந்தரமூர்த்தி, சுவேந்து, திங்களன், வைசாக் ஆகியோர்  விவசாயிகளுக்கு தென்னை சத்து ஊக்கி குறித்து விளக்கினர். நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த  சத்து ஊக்கியை தென்னை மரத்துக்கு பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை மற்றும் அதனால் தவிர்க்கப்படும் குறைபாடுகள்(குரும்பை உதிர்வு, சொரி பூச்சி தாக்குதலிலிருந்து தென்னை மரத்தை பாதுகாத்து மகசூல் அதிகரிக்கச் செய்யும் என்று களத்தில் விளக்கினர். மேலும் வேர் வழி  செலுத்தும் செயல் விளக்கமும் அளித்தனர்.  இதில் அப்பகுதியை சேர்ந்த தென்னை விவசாயிகள்  செயல் விளக்கம் பெற்று பயனடைந்தனர்.

Related Stories: