சுட்டெரிக்கும் வெயிலால் சுருளும் காய்கறி பயிர்கள்

தேவதானப்பட்டி, மார்ச் 7: தேவதானப்பட்டி பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலால் காய்கறி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, காமக்காபட்டி, செங்குளத்துப்பட்டி, சாத்தாகோவில்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, அ.வாடிப்பட்டி, குள்ளப்புரம் ஆகிய இடங்களில் கத்தரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சுரைக்காய், சாம்பார் பூசணி, உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் காய்கறி பயிர்களில் பூக்கள் உதிர்ந்து வருகிறது. மேலும் காய்கள் வெம்பி பயனற்றதாக உள்ளது. ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து மகசூலுக்கு வரும் போது காய்கறி பயிர்கள் கடுமையான வெயிலால் பாதிக்கப்பட்டுவருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Related Stories: