×

மணல் கொள்ளை தவெக பிரமுகர் லாரி பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெரியகுளத்தில் மர்ம நபர்கள் அரசு அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக தனித்துணை தாசில்தார், கனிமம் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரி மகேஷிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், ஜீப் டிரைவர் கவியரசரன் மூலம் பெரியகுளத்திற்கு சென்றார்.

அப்போது அங்கு 3 யூனிட் திருட்டு மண்ணுடன் டிப்பர் லாரி கிளம்புவதற்கு தயாராக நின்றிருந்தது. இவர்களை பார்த்ததும் டிரைவர், கிளீனர் தப்பியோடி விட்டனர். இதையடுத்து தாசில்தார் லாரியை பறிமுதல் செய்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையே மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரியின் உரிமையாளர் ஜெகநாதன் பாஜவில் இருந்து தவெகவில் இணைந்ததும் தெரிய வந்தது.

 

Tags : Dindigul ,Beriyakul ,Kulathur Uratchi ,Thadikombu ,Officer ,Mahesh ,
× RELATED மகளுக்கு ஆடம்பரமாக திருமணம்...