×

‘கோரிக்கைகளை எடுத்துக்கொண்டு வராதீர்கள்’ தொழிற்சங்கங்களை விரட்டியடித்த போக்குவரத்து துறை அமைச்சர்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள், தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநரின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனை சந்தித்து அளிக்க சென்றுள்ளனர். ஆனால், அமைச்சர் எங்களை காண வராதீர்கள் என கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நிருபர்களிடம் உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜாகீர் உசேன் கூறியதாவது:  தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வர் விஜய் பொறுப்பேற்றுள்ள சூழலில், போக்குவரத்துத் துறையில் தங்களது நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும் என்று நம்பியிருந்த ஆட்டோ, கால் டாக்ஸி மற்றும் மேக்ஸி கேப் ஓட்டுநர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. போக்குவரத்துத் துறையில் இடைத்தரகர்கள் நடமாட்டமும், லஞ்ச ஊழலும் தற்போது மோசமாக போய்க்கொண்டிருக்கிறது.

ஆனால், எங்களது கோரிக்கைகளை காது கொடுத்துக் கேட்கக் கூட தயாராக இல்லாத அமைச்சர், ‘இது சம்பந்தமாக எல்லாம் நீங்கள் என்னிடம் வரவே வேண்டாம், நாங்களே பார்த்துக் கொள்கிறோம், எங்களுக்கு எல்லாம் தெரியும்’ என்று கூறி எங்களை வெளியில் அனுப்புவதிலேயே குறியாக இருந்தார். இதுவரை எந்த ஒரு அமைச்சரும் எங்களிடம் இப்படி நடந்துகொண்டதில்லை. இந்த ஆட்சியில் எங்களது வாழ்வாதார கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Transport Minister ,Chennai ,Urinakkural Drivers' Union ,Chennai Secretariat ,Vijay Thamizhan Parthiban ,Tamil Nadu ,calabash ,minister ,
× RELATED மகளுக்கு ஆடம்பரமாக திருமணம்...