×

தவெக ஆட்சியில் வாகனங்களுக்கு பேன்ஸி எண் வழங்குவது நிறுத்தம்: மக்கள் அலைக்கழிப்பு என புகார்

சென்னை: தமிழகத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு வாகனத்திற்கும் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ஒரு பதிவு எண் (தனித்துவ எண்) ஒதுக்கப்படும். பதிவின்போது, எண் தோராயமாக ஒதுக்கப்படும். இதில் முன்னுரிமை (Advance) மற்றும் பேன்ஸி (Fancy) எண் (அரசு ஒதுக்கப்பட்ட எண்) உரிமையாளருக்கு தேவை என்றால் பேன்ஸி எண், விற்பனைச் சான்றிதழின் நகலுடன் உரிமையாளர் விண்ணப்பம் செய்ய வேண்டும் (CMVR படிவம்-21).

அது அரசு செயலாளரிடம், உள்துறை (போக்குவரத்து) துறைக்கு அனுப்பப்பட்டு ரூ.40,000 முதல் ரூ.2,00,000 வரை எண்ணுக்கு ஏற்ற வகையில் அரசுக்கு செலுத்தி எண் பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் தவெக அரசு அமைந்ததில் இருந்து பேன்ஸி கொடுப்பது கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக தாம்பரத்தை சேர்ந்த மகேஷ் குமார் கூறியதாவது: பொதுவாக வாகனத்திற்கு பேன்ஸி எண் வேண்டும் என்றால் உள்துறையிடம் அனுமதி பெற்று ஆர்டிஓ அலுவலகத்தில் பணம் செலுத்தினால் போதும்.

தினமும் 30 முதல் 40 வாகனங்களுக்கு அரசு ஒதுக்கப்பட்ட எண் கிடைக்கும். தவெக அரசு வந்த பிறகு இதனை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது. முதலில் டீலர் மூலமாகக் கேட்டோம், அது நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்தனர். அதற்கு பிறகு நாங்கள் நேரில் சென்று உள்துறையிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் அமைச்சரை கேளுங்கள் என்று தெரிவித்துவிட்டனர். சரி என்றால் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனை பார்க்கச் சென்றோம். என்னுடன் 50 பேர் எண் வாங்குவதற்கு காத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 1 வாரமாக காத்துக்கொண்டிருக்கிறோம்.

எண் வாங்குவதற்கு தொடர்ந்து எங்களை அலைக்கழிக்கின்றனர். அது மட்டுமின்றி இதனால் அரசுக்கு வர வேண்டிய வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 50 வாகனங்களுக்கு இதுபோன்ற எண் வாங்குவார்கள். தற்போது இது எல்லாம் வருவாய் இழப்புதான். மேலும் வண்டியின் உரிமையாளர் தான் வர வேண்டும் என புதிதாகக் கூறுகிறார்கள். குறிப்பாக இதற்கு உள்துறைதான் அனைத்து அனுமதியும் வழங்கும். ஆனால் எதற்கு அமைச்சரிடம் செல்ல வேண்டும் என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு தீர்க்க வேண்டும்.

Tags : Dekka ,Chennai ,Tamil Nadu ,
× RELATED முதல்வர் தொகுதி பெரம்பூர் உள்பட...