×

8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தலைமை செயலாளர் சாய் குமார் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சாய் குமார் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிவிப்பு: பொதுப்பணித் துறை செயலாளராக இருந்த ஷுன்சோங்கம் ஜடக் சிரு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் செயலாளராகவும், நெடுஞ்சாலைத்துறை செயலாளராக இருந்த செல்வராஜ் பொதுப்பணித் துறையின் செயலாளராகவும், தொழில்கள், முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தக துறையின் சிறப்புச் செயலாளராக இருந்த சந்தீப் நந்தூரி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவப் பணியாளர் தேர்வாணைய தலைவராக இருந்த உமா மகேஸ்வரி புதிதாக உருவாக்கப்பட்ட கைத்தறி இயக்குநர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் துணைச் செயலாளராக இருந்த அழகுமீனா மருத்துவப் பணியாளர் தேர்வாணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நகர பஞ்சாயத்துகள் இயக்குநராக இருந்த பிரதீப் குமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையராக இருந்த சுரேஷ்குமார், தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராக இருந்த சித்ரா விஜயன் சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Secretary ,Sai Kumar ,Chennai ,IAS ,Tamil Nadu ,Shunsongam Jatak Siru ,Public Works Department ,Highways ,Minor Ports Department ,Highways Department… ,
× RELATED முதல்வர் தொகுதி பெரம்பூர் உள்பட...