×

உலக யோகாசனா சாம்பியன்ஷிப் 102 தங்கம் வென்று இந்தியா சாதனை

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது உலக யோகாசனா சாம்பியன்ஷிப் 2026 தொடர் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்த தொடரில் போட்டியை நடத்திய இந்திய அணி 102 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 114 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.  இந்த தொடரில் 79 நாடுகளைச் சேர்ந்த 522 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இருப்பினும், பெரும்பாலான போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தினர். பதக்கப் பட்டியலில் ஜப்பான் 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அர்ஜென்டினா மூன்றாவது இடத்தை கைப்பற்றியது. முதல் உலக யோகாசனா சாம்பியன்ஷிப்பிலேயே இந்தியா பதக்க வேட்டையில் ஆதிக்கம் செலுத்தி உலக அரங்கில் தனது வலிமையை நிரூபித்துள்ளது.

 

Tags : India ,World Yogasana Championship ,Ahmedabad ,World Yogasana Championship 2026 ,
× RELATED ஆப்கனுக்கு எதிரான டெஸ்ட்டில் அபாரம்;...