×

முத்தரப்பு தொடரில் முத்திரை பதித்த இந்திய ஏ: இலங்கையை வீழ்த்தி திரில் வெற்றி

தம்புல்லா:இந்தியா-ஏ, இலங்கை-ஏ, ஆப்கானிஸ்தான்-ஏ அணிகளுக்கிடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. நேற்று தொடங்கிய தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணியின் கேப்டன் திலக் வர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் வைபவ் சூர்யவன்சி களமிறங்கினர். சூரியவன்சி 12 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து அதிர்ச்சியளித்தார். பிரப்சிம்ரன் சிங்கும் 11 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

இதையடுத்து பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். 32 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த பிரியான்ஷ் ஆர்யா ரன் அவுட்டானார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் சதம் விளாசி அசத்தினார்.

பின்னர் அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 101 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து திலக் வர்மாவும் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்தியா ஏ அணி 50 ஓவர்களில் 277 ரன்கள் எடுத்தது. 278 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி தொடக்கம் முதல் பொறுப்புடன் விளையாடியது. நிரோஷன் டிக்வெல்லா, அவிஸ்கா பெர்னாண்டஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

நிரோஷன் டிக்வெல்லா 47 ரன்களிலும், அவிஸ்கா பெர்னாண்டஸ் 45 ரன்கள் ரன்களிலும் வெளியேறினர். தொடர்ந்து சஹான் அரசிங்கே அதிரடியாக விளையாடி 74 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இலங்கை அணி 48.5 ஓவர்களில் 269 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags : India A ,tri-series ,Sri ,Lanka ,Dambulla ,India-A ,Sri Lanka-A ,Afghanistan-A ,Sri Lanka ,Sri Lanka A. ,Tilak Verma ,
× RELATED ஆப்கனுக்கு எதிரான டெஸ்ட்டில் அபாரம்;...