×

நாகர்கோவிலில் பஸ் நிலையத்தில் உலா வரும் மாடுகள், நாய்கள்: பயணிகளுக்கு தொல்லை

 

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பஸ் நிலையங்களில் உலா வரும் மாடுகள், நாய்களால் பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலில் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம், மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையம் ஆகிய இரு பஸ் நிலையங்களும் முக்கியமான பஸ் நிலையங்கள் ஆகும். வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து வெளி மாவட்ட பஸ்களும், மீனாட்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து உள்ளூர் பஸ்களும் இயங்குகின்றன. இரு பஸ் நிலையங்களுக்கும் நாள்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் வடசேரி பஸ் நிலையத்தில் சமீப காலமாக நாய்கள், மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. பஸ் நிலையத்தில் உலா வரும் மாடுகள் திடீரென சண்டையிட்டு, பிளாட்பாரங்களில் ஏறி விடுகிறது. இதனால் பயணிகள் பெரும் பாதிப்படைந்து வருகிறார்கள். இதே போல் நாய்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது. ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நாய்கள் பிடிக்கப்பட்டன. ஆனாலும் நாய்கள் எண்ணிக்கை குறைய வில்லை. பஸ் நிலையத்தில் உலா வரும் நாய்கள் பயணிகளை துரத்தி, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலை உள்ளது.

இதே நிலை தான் மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையத்திலும் உள்ளது. கழிவறை செல்லும் பகுதிகளில் நாய்கள், மாடுகள் தொல்லை அதிகமாக இருப்பதால் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். எனவே மாநகராட்சி சார்பில் மாடுகளை பிடித்து கோ சாலைக்கு கொண்டு செல்ல வேண்டும். நாய்களை கருத்தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Nagercoil ,Nagarko ,Nagarkovo ,Vadaseri Christopher Bus Station ,Meenakshipuram Anna Bus Station ,
× RELATED திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர்...