- மம்தா பானர்ஜி
- டெரிக் ஓ'பிரையன்
- கொல்கத்தா
- முன்னாள் முதல்வர்
- மேற்கு
- நிலை
- சிஐடி
- முதல்வர்
- மேற்கு வங்க சட்டமன்றம்
- திரிணாமூல் காங்கிரஸ்
- முதல் அமைச்சர்
- திரிணமுல்
கொல்கத்தா: மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி வீட்டில் சிஐடி சோதனை நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க சட்டசபையில் 58 திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொறடா காகோலி கோஷ் தஸ்திதர் தலைமையில், 28 மக்களவை எம்பிக்களில் 20 பேர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக கடிதம் அளித்தனர்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இருந்து தப்பிக்கத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பலம் இந்த அதிருப்தி எம்பிக்களிடம் உள்ளதால், அவர்கள் எம்பி பதவியை இழக்க மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. இதனிடையே 13 சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தை போலியாக பதிவு செய்து கடிதம் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. போலி கையெழுத்து புகாரை அடுத்து கொல்கத்தாவில் உள்ள மம்தா பானர்ஜி வீட்டில் சிஐடி சோதனை நடத்தி வருகின்றனர்.
மம்தா பானர்ஜி வீட்டில் சோதனை நடத்துவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என டெரிக் ஓ பிரையன் கண்டனம் தெரிவித்துள்ளார். முதலில் வாக்குகளை கொள்ளையடித்தனர்; இப்போது அரசியல் போட்டியாளரின் கோப்புகளை கொள்ளை அடிக்கிறார்கள். சோனியா காந்தியை மம்தா பானர்ஜி சந்தித்த அதே சமயத்தில் சோதனை நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.
