கள்ளக்காதலை கண்டித்து மனைவி விலகியதால் மாமியாரை திருமணம் செய்து கொண்ட மருமகன்: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

 

அக்பர்பூர்: மாமியாரை மருமகன் நீதிமன்றத்தில் முறைப்படி திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டம் அக்பர்பூர் பகுதியைச் சேர்ந்த நபர் (35), தனது மாமியாருடன் (52) நீண்டகாலமாகத் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த ரகசிய விவகாரத்தை அவரது மனைவி (27) நேரில் பார்த்துக் கண்டுபிடித்ததால், இருவருக்கும் இடையே நடந்த மோதலால் திருமண வாழ்க்கை முறிந்தது.

தனது மனைவியைப் பிரிந்த அந்த நபர், தனது மாமியாரையே முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இந்நிலையில், மருமகனும் மாமியாரும் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. மாலையும் கழுத்துமாக திருமணச் சான்றிதழை ஏந்தியபடி அவர்கள் இருக்கும் வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது; இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்றாலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று தெரிவித்தனர்.

Related Stories: