×

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் விஜய்

 

சென்னை: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நிகழ்வை தொடங்கி வைத்தது மனதுக்கு நெருக்கமானது என்று முதலமைச்சர் விஜய் உரையாற்றியுள்ளார். சிங்கப்பெண் அதிரடி படையை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய். சிங்கப்பெண் அதிரடிப்படை இலச்சினையை வெளியிட்டார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் உறுதியாக உள்ளோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் சமரசத்துக்கு இடமே இல்லை. போதைப்பொருள் நடமாட்டமே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு காரணம். போதைப்பொருள் நடமாட்டத்தை தடுத்தால்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். போதைப்பொருள் நடமாட்டத்தை வேரோடு அறுக்க வேண்டும். தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடித்தாலே பல பிரச்சனைகள் குறைந்து விடும்.

பெண்களை தொல்லை செய்துவிட்டு தப்பித்துவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை பெற்று தரப்படும். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை எலக்சனுக்காக மட்டும் சொல்லல என்னுடைய மனதில் இருந்து வந்தது, சொன்னதை அனைத்தையும் நிச்சயமாக படிப்படியாக செய்வோம். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பெண் அதிரடிப்படைக்காக 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார் . சிங்கப்பெண் அதிரடிப்படைக்காக நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ரோந்து வாகனங்கள் வாங்கப்படும். முதல்முறையாக ட்ரோன் ரோந்து அறிமுகம் செய்யப்படும்.

Tags : Singappen Special Action Force ,Chief Minister ,Vijay ,Chennai ,Singapen Action Force ,
× RELATED சென்னை ராஜரத்தினம் மைதானத்தில்...