×

அந்தமான் கடலில் பிரமாண்ட எரிவாயு புதையல் கண்டுபிடிப்பு..!!

டெல்லி: ஒன்றிய அரசின் ஆழ்கடல் ஆய்வு திட்டமான சமுத்ர மந்தன் திட்டத்தின் கீழ் அந்தமான் கடற்பகுதியில் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை தோண்டப்பட்ட 3 கிணறுகளில் 2 கிணற்றில் எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த எரிவாயு கிணற்றில் இருந்து 30 முதல் 40 ஆண்டுகள் வரை தடையின்றி தொடர்ந்து எரிபொருளை எடுக்க முடியும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு இந்தியாவின் உள்நாட்டு எரிவாயு உற்பத்தியை ஒரே அடியாக 30% சதவீதம் வரை உயர்த்தும் என நம்பப்படுகிறது. இந்த எரிவாயுவை எடுப்பதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை என்பதால், இந்திய அரசு 100% சதவீதம் அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து உலக மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, மிகப்பெரிய ஆற்றல் நுகர்வு நாடுகளில் ஒன்றாக உள்ளது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் 3 வது பெரிய நாடாக ஆற்றல் நுகர்வில் இந்தியா உள்ளது. இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு பெருமளவு இறக்குமதியையே நம்பியுள்ளது. சரியாக சொல்வது என்றால், கச்சா எண்ணெயில் 88.5% சதவீதம் மற்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் கேஸ் வாகனங்களுக்கான சி.என்.ஜி. மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் எரிவாயுவில் சுமார் 50 சதவீதம் வெளிநாட்டு இறக்குமதியையே நம்பியிருக்கிறது. இதற்காக ஆண்டுக்கு 12.5 லட்சம் கோடி ரூபாய் இந்தியா செலவு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Andaman Sea ,Delhi ,Manthan ,EU government ,
× RELATED மது கிடைக்கும் அனைத்து இடங்களிலும்...