டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து நெல்லையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

நெல்லை, மார்ச் 7: டெல்லியில் 100வது நாளாக போராடி வரும் விவசாயிகளை ஆதரித்து நெல்லையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு புதிதாக நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த ஆண்டு நவ.26ம் தேதி முதல் பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளை முற்றுகையிட்டு 100வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விவசாயிகளை ஆதரித்து நெல்லை  வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செல்லத்துரை தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் ராஜகுரு, நோக்கத்தை விளக்கிப் பேசினார். இதில் மாவட்ட துணைச்செயலாளர் செந்தில், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் மாறவர்மன், மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், பட்சிராஜன், பேரின்பராஜ், குழந்தைவேலு உள்ளிட்ட பலர் கோஷமிட்டனர்.

Related Stories: