காரில் கடத்திய கவரிங் நகை பறிமுதல்

நெல்லை, மார்ச் 7:  தமி ழக சட்டப்பேரவைத் தேர்தலையடுத்து அமைக்கப் பட்டுள்ள பறக்கும் படையினர் அனுமதியின்றியும், உரிய ஆவணங்கள் இன்றியும் கொண்டுசெல்லப்படும் பொருட்கள் மற்றும் பணத்தை வாகன சோதனை நடத்தி பறிமுதல் செய்துவருகின்றனர். அந்த வகையில் பாளை சட்டமன்ற தொகுதிக்கு நியமிக்கப்பட்ட எஸ்எஸ்டி 2 குழுவினர் கேடிசிநகர் சாலையில் வாகன சோதனையில் நேற்றிரவு ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை நிலையான கண்காணிப்பு அகஸ்டின் ஜான் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். இதில் எந்தவிதமான ஆவணங்களும் இன்றி 5 பைகளில் வைத்து காரில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள கவரிங் நகைகளை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து காரை ஓட்டிவந்த அதன் உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில் அவர் தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த முகமது ஷேக் என்பதும், புளியங்குடியில் இருந்து சாயல்குடிக்கு கொண்டு செல்வதாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து கவரிங் நகைகள் குறித்து ஆவணங்களில் கையெழுத்து வாங்கிவிட்டு காரில் அவரை அனுப்பிவைத்தனர். பின்னர் 5 பைகளிலுள்ள கவரிங் நகைகளை பண்டல்களாக கட்டி முறையாக முத்திரையிட்ட அதிகாரிகள், பாளை தாசில்தார் செல்வத்திடம் முறைப்படி ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து அவை சார்நிலை கருவூலத்தில் இருப்பு வைக்கப்பட்டது.

Related Stories: