பாளை கல்லூரியில் தாமிரபரணி வாழ் பறவை விழிப்புணர்வு கண்காட்சி

நெல்லை, மார்ச் 7: அரசு அருங்காட்சியகம், சதக்கத்துல்லா கல்லூரியின் விலங்கியல் துறை சார்பில் தாமிரபரணி வாழ் பறவைகள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் சிறப்பு கருத்தரங்கு நடந்தது. பாளை சதக்கத்துல்லா கல்லூரி கலையரங்கில் நடந்த இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு)  முகமது அமீன் தலைமை வகித்தார். துணை முதல்வர் செய்யது முகமது காஜா முன்னிலை வகித்தார். கல்லூரி விலங்கியல் துறை தலைவர்  சித்தி ஜமீலா வரவேற்றார். இதையடுத்து அகத்தியர்மலை இயற்கை வள காப்பு மைய மூத்த ஆராய்ச்சியாளர்  மதிவாணன், தாமிரபரணி வாழ் பறவைகள், அவற்றை பேணி பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை விளக்கினார். இதையொட்டி விலங்கியல் பிரிவு முதலாமாண்டு மாணவ, மாணவிகள் அர்ப்பணிப்புடன் அமைத்திருந்த தாமிரபரணி வாழ் பறவைகள் குறித்த சிறப்பு கண்காட்சியை  ஏராளமானோர் பார்வையிட்டனர். கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த மாணவர்கள் தேவையான விவரங்களை அளித்தனர். ஏற்பாடுகளை நெல்லை அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி, சதக்கத்துல்லா கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: