×

உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை 4-ஆக குறைப்பு

டெல்லி: ஒன்றிய அரசின் முக்கியத் திட்டமான ‘உஜ்வாலா’-வின் கீழ் பயனாளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை நான்காக குறைக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை உயர்வுக்கு மத்தியில் சராசரி குடும்ப நுகர்வுக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்து இருக்கிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ (PMUY) திட்டத்தின் கீழ், பயனாளிகள் ஆரம்பத்தில் ஆண்டுக்கு 14.2 கிலோ எடையுள்ள 12 மானிய விலையிலான சிலிண்டர்களை பெற்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த மானிய ஒதுக்கீடு சிலிண்டர்களின் எண்ணிக்கை 9-ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது அது மேலும் குறைக்கப்பட்டு நான்கு சிலிண்டர்களாக மாற்றப்பட்டு உள்ளது. மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்கான முக்கிய காரணமாக உஜ்வாலா திட்டப் பயனாளிகளின் சராசரி சிலிண்டர் பயன்பாடு கூறப்படுகிறது.

ஒன்றிய பெட்ரோலிய அமைச்சக தரவுகளின்படி, உஜ்வாலா திட்டப் பயனாளிகள் ஒரு வருடத்திற்கு சராசரியாக 3.6 முதல் 4.4 சிலிண்டர்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். எனவே தேவையற்ற மானிய ஒதுக்கீடுகளை தவிர்க்க மற்றும் மக்கள் உண்மையில் பயன்படுத்தும் சிலிண்டர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த வரம்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஒன்றிய அரசின் இந்த புதிய அறிவிப்பால், ஆண்டுக்கு 4 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்படும் உஜ்வாலா பயனாளிகளும் சந்தை விலையிலேயே கூடுதல் சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Tags : Ujwala ,Delhi ,EU government ,
× RELATED இனிஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் மட்டுமே...