×

வேளாங்கண்ணி புறவழிச்சாலை திட்டத்தால் மா, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்

நாகப்பட்டினம், ஜூன் 9: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் சரபோஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவகுரு பாண்டியன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: விவசாய கருவிகளுக்கான பட்டியலில் வேளாண் டிராக்டர்களை இணைக்க வேண்டும். வேளாண் டிராக்டர் டீசலுக்கு முழு வரி விலக்கு வேண்டும். சாலை வரி, தேசிய பேரிடர் வரி ஆகியவற்றை நீக்க வேண்டும்.என மனுவில் கூறியுள்ளனர்.

வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் கையில் மாங்காய் உடன் வந்துகலெ க்டரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் 500க்கும் மேற் ட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த கிராம மக்களின் வாழ்வாதாரமாக ஆயிரம் ஏக்கரில் விவசாயத்துடன் இணைந்த மாங்காய், தென்னை, முந்திரி தோப்புகள் அமைந்துள்ளது.

நாகப்பட்டினம் மாவ ட்டத்தில், புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால் புதிதாக புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக போடப்படும் புறவழிச்சாலை அமைய உள்ள ஆயிரம் ஏக்கரில் மா மற்றும் தென்னை தோப்புகள் அழிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்படும். எனவே தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தில் சாலை விரிவாக்க பணிக்காக நிலம் எடுப்பதை கைவிட்டு சக்திவிநாயகர் கோயில் இணைப்பு சாலையை அகலப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags : Nagapattinam ,Nagapattinam Collector's Office ,Collector ,Pravinkumar ,District Secretary ,Sarapoji ,Tamil Nadu Farmers Association ,Shivaguru Pandian ,Communist Party of India ,
× RELATED தன்னார்வ குருதி கொடையாளருக்கு பாராட்டு