×

சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஜூன் 9: நாகப்பட்டினத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நாகப்பட்டினம் அவுரித்திடலில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மாலா தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை நிரந்தரமாக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். மாவட்டச் செயலாளர் சுபாதேவி நன்றி கூறினார்.

Tags : All India Women's Association ,Nagapattinam ,All India Democratic Women's Association ,
× RELATED தன்னார்வ குருதி கொடையாளருக்கு பாராட்டு