×

மனநல பயிற்சி முகாம்

 

பழநி, ஜூன் 9: பழநி அருகே தாழையூத்து சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தன்னம்பிக்கை வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடந்தது. கல்லூரியின் தலைவர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார்.
செயலர் சுப்பிரமணி, தலைமை நிர்வாக அதிகாரி சுவேதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரிமுதல்வர் கருப்புச்சாமி வரவேற்றுப் பேசினார்.
பழநியைச் சேர்ந்த சித்த மருத்துவர் டாக்டர் பன்னீர்செல்வம் மன அழுத்தமின்றி வாழ்வதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்முறை, நினைவாற்றலை அதிகரிக்கும் முறைகள், கவனச்சிதறலை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். பெண் கல்வியின் அவசியம், நாட்டின் முன்னேற்றம், தேர்விற்கு தயாராகும் முறை, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் நடந்து கொள்ளும் விதம் உள்ளிட்டவை குறித்து குட்டிக்கதைகள் மூலம் விளக்கமளிக்கப்பட்டன. ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Mental Health Training Camp ,Palani ,Thalaiyuthu Subramanya Arts and Science College ,Jayalakshmi ,Subramani ,CEO ,Suvetha ,
× RELATED கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட...