×

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

சென்னை: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் நேற்று திமுகவில் இணைந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், ஐ.யூ.எம்.எல், அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த வாலாஜா ஒருங்கிணைப்பாளர்கள் ரிபாய், ஏ.எஸ்.இல்யாஸ், முகமது முபாரக், அக்பர் பர்ஷா, ஏ.பாஷா, இம்ரான் ஜலீல், அக்பர், மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் ஜகபர்சாதிக், வணிகர் அணி அமீர்பாபுகாஜா- குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நிஜாம், அல்அமீன், முகமது சபீர், குளச்சல் பகர்தீன், தொண்டர் அணி நசீர்ஷா, மாணவர் அணி மா.முகமது அஸ்கர், குளச்சல் அப்துல்கரீம், அஜமல்கான், ஜகபர்சாதிக், முகமது சபீர், புதுமடம் ஹலீம், ரஷித்அலி, நிசார்அலி, ஹாரிஷ்அல்யாசின், முகமது அசாருதீன், முகமது பைசல், முகமது இம்தியாஸ், இபான்கான், ஹாபில்அல்யாசின், ஆசிக் அலி நஜிமுதீன், அகமது, அலாஹ்வாத் அமீர்பாஷா, சபீர்அகமது, இன்பராஜ், சபீர்அகமது, இன்பராஜ், சீர்காழி வெங்கடேஷ், முகமது பைசல், மருத்துவ மணி அபான் அகமது, ஷாகுல்இம்தியாஸ், முகமது நவீத், முகமது சலீம், அஜ்மல்அஹமது, முகமது ரியாஸ்- காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புகாரிகாஜா, அமீர்பாபுகாஜா, சீர்காழி வெங்கடேஷ், ராஜசேகர்.
அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட மீனவர் அணி துணைச் செயலாளர் சாகுல்அமீத், சாகுல் அமீது-விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த குளச்சல் அ.சித்திக், சந்தோஷ்குமார் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

அப்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாநில சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு செயலாளர் டாக்டர் சுபேர்கான் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Alternative ,DMK ,MK Stalin ,Chennai ,president ,IUML ,AIADMK ,Congress ,Anna Arivalayam, Chennai ,
× RELATED புதுச்சேரியில் புதிய அமைச்சர்கள்...