மாவட்டத்தில் 60 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி

கிருஷ்ணகிரி, மார்ச் 7: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்படும் என கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ஜெயசந்திரபானு ரெட்டி  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்தங்கரை 4ரோடு அருகில் 500 மக்கள் தொகையுடனும், காரப்பட்டில் 300, பாம்பாறு டேம் 1000, கல்லாவி பஸ்நிலையம் அருகில் 400, ஆனந்தூரில் 250, சிங்காரப்பேட்டை பஸ்நிலையம் அருகில் 450, அத்திப்பாடியில் 300, பெரியதள்ளப்பாடியில் 250, மத்தூர் பஸ்நிலையம் அருகில் 500, கண்ணன்டஅள்ளி கூட்ரோடு அருகே மற்றும் தொகரப்பள்ளியில் 300, சாமல்பட்டி ரயில்வே கேட் அருகில் 400 மக்கள் தொகையுடன் பொதுக்கூட்டம் நடத்தலாம். பர்கூரில் பஸ் நிலையம் அருகில் 1000, முருகர் கோயில் அருகில் 500, ஜெகதேவி பஸ்நிலையம் அருகில் 1000, கந்திகுப்பம் இந்தியன் வங்கி அருகில் 1000, வரட்டனப்பள்ளி பஸ்நிலையம் அருகில் 500, போச்சம்பள்ளி பஸ்நிலையம் அருகில் 1000, அரசம்பட்டி சந்தை மண்டபம் அருகில் 1500 மக்கள் தொகையுடன் கூட்டம் நடத்தலாம்.

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில், கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் 1500, 5ரோடு ரவுண்டானா அருகில் 750, கார்னேஷன் மைதானத்தில் 5000, பழையபேட்டை காந்தி சிலை அருகில் 500, காவேரிப்பட்டணம் பஸ்நிலையம் அருகில் 500, காவேரிப்பட்டணம் பிடிஓ அலுவலகம் அருகில் 500, கே.பூசாரிப்பட்டியில் 1000, குருபரப்பள்ளியில் 1000, குருபரப்பள்ளி இணைப்பு சாலையில் 1000 மக்கள் தொகையுடன் கூட்டம் நடத்தலாம். வேப்பனஹள்ளி தொகுதியில், பேரிகை-ஓசூர் இணைப்பு சாலை, வேப்பனஹள்ளி காந்தி சிலை அருகில், நாச்சிக்குப்பம் இணைப்பு சாலை, பேரிகை பழைய பஸ்நிலையம் அருகே, காந்தி சிலை அருகே1000 மக்கள் தொகையுடன் கூட்டம் நடத்தலாம்.

இதேபோல், ஓசூர் தொகுதியில், ஓசூர் காமராஜர் காலனி அருகே, ராம் நகர் வளைவு அருகில் 250, ரயில்வே நிலையம் அருகில் 1000, பாகலூர் சாலை புதிய வீட்டு வசதி வாரியம் அருகில், கெலமங்கலம் இணைப்பு சாலையில் 1500, சிப்காட் முத்துமாரியம்மன் கோயில் அருகில் 1000, பாகலூர் இணைப்பு சாலை அருகில் 1000 மக்கள் தொகையுடன் கூட்டம் நடத்தலாம். தளி தொகுதியில், தேன்கனிக்கோட்டை பழைய பஸ்நிலையம் அருகில் 300, சந்தை மைதானம் அருகில் 500, புதிய பஸ்நிலையத்தின் பின்பறம் 500, கெலமங்கலம் சந்தை மைதானத்தில் 500, அஞ்செட்டி பஸ்நிலையம் அருகில் 250 மக்கள் தொகையுடன் பொதுக்கூட்டங்கள் நடத்தலாம். மேலே குறிப்பிட்டுள்ள 60 இடங்களில் மட்டுமே, பொதுகூட்டம் நடத்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல் துறையிடம் அனுமதி பெற்று, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள உரிய வழிமுறைகளை தவறாமல் கடைபிடித்து பொதுக்கூட்டங்களை நடத்திக்கொள்ளலாம். இவ்வாறு  அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: