பூத்து குலுங்கும் கொத்தமல்லி

அரூர்,  மார்ச்7: கம்பைநல்லூர் பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள  கொத்தமல்லி, கோடை காலம் தொடங்கியதால் செழித்து வளர்த்து, செடியில் பூக்கள்  பூத்து குலுங்குகிறது. அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை  மற்றும் சுற்றுபுற பகுதியில் உள்ள விவசாயிகள்,  சுமார் 200 ஏக்கர்  பரப்பளவில் கொத்தமல்லி சாகுபடி செய்துள்ளனர். மூன்று மாத கால பயிரான  கொத்துமல்லி, இலையாகவும், அதன் விதைகள் உணக்காக பயன்படுத்தப்படுகிறது.  கொத்தமல்லி உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒசூர், தளி, தேன்கனிக்கோட்டை  பகுதியிலிருந்து கொத்தமல்லி வாங்கி வந்து பெரிய கட்டு ₹10க்கு விற்பனை  செய்யப்பட்டு வருகிறது. கம்பைநல்லூர் பகுதியில் சாகுபடி செய்யப்படும்  கொத்தமல்லி, அதிக அளவில் விதையாக அறுவடை செய்யப்படுகிறது. தற்போது கோடை  காலம் துவங்கியுள்ளதால், கொத்தமல்லி செடிகள் செழித்து வளர்ந்து பூக்கள்  பூத்து குலுங்குகிறது. இன்னும் ஒரு மாதத்தில் விதை முற்றியதும், அறுவடை  துவங்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: