ரயில்வே மேம்பால பணிக்காக முன் அறிவிப்பின்றி சாலை மூடல்: பொதுமக்கள் மறியல்

 

தண்டையார்பேட்டை: ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எண்ணூர் நெடுஞ்சாலை நேரு நகர் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இவ்வழியாக, கூட்ஸ் ரயில்கள் செல்லும்போது, இந்த ரயில்வே கேட் மூடப்படுவதால், தினசரி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில், கடந்த திமுக ஆட்சியில் ரூ.75 கோடி மதிப்பீட்டில், இப்பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன் பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாக கூறி, இந்த ரயில்வே கேட் மூடப்பட்டது. எந்த முன் அறிவிப்பும் இன்றி திடீரென ரயில்வே கேட்டை மூடியதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதை கண்டித்து சாைல மறியலில் ஈடுபட்டனர்.

 

Related Stories: