×

பறிமுதல் செய்யப்படும் பணம் ஆவணம் இருந்தால் தரப்படும்


தர்மபுரி, மார்ச் 7: தர்மபுரி மாவட்டத்தில், தேர்தல் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்படும் பணம், பொருட்கள் உரிய ஆவணங்கள் இருந்தால் திரும்ப வழங்கப்படும் என தர்மபுரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணக்குபிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கணக்கு பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் பறக்கும் படை அலுவலர் மற்றும் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர்களால் கைப்பற்றப்படும் தொகை ₹50 ஆயிரத்திற்கு மேல் அல்லது அதற்கு சமமான வெகுமதி உள்ள பொருட்களை சரியான ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்டால், சம்மந்தப்பட்டவர்கள் தகுந்த ஆதராங்களை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம். ஆவணங்களான ஆதார் அட்டை, பான்கார்டு மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட தொகை அல்லது பொருட்களுக்கு உண்டான தகுந்த ஆதாரங்களின் நகல்களை பறிமுதல் செய்யப்படும் குழுவினர்களான (சீசர்கமிட்டி) திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தர்மபுரி கருவூல அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்குகள்), சரிபார்த்த பின்னர் நேர்மையான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை மற்றும் பொருட்கள் திரும்ப வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா