×

கிடப்பில் போடப்பட்ட தார் சாலை பணிகள்

பாப்பாரப்பட்டி, மார்ச் 7:   பாப்பாரப்பட்டி  பேரூராட்சி 5வது வார்டில் 100க்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள பொதுத்துறை வங்கியின்  பின்புறம், புதிதாக சாலை அமைக்க  முடிவு செய்த பேரூராட்சி நிர்வாகம், மண் மற்றும்  ஜல்லிக்கற்களை கொட்டினர். ஆனால் பணிகளை கிடப்பில் போட்டு விட்டனர். பல மாதங்கள்  ஆகியும் சாலை பணிகளை மேற்கொள்ளவில்லை. இப்பகுதியில் பேருந்து நிலையம்,  பொதுத்துறை வங்கி, பேரூராட்சி அலுவலகம், தொடக்கப்பள்ளி மற்றும் நூலகம்  உள்ளிட்ட பல அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளன. பாப்பாரப்பட்டி மெயின் ரோட்டில்  இருந்து பல்வேறு குறுக்கு சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இந்நிலையில்,  பேரூராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டு பணிகளை துவங்கியவுடன் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள்  சிரமப்படுகின்றனர். மேலும், சாக்கடை கால்வாய் இல்லாததால், கழிவுநீர்  சாலையில் தேங்கி துர்நாற்றம்  வீசுவதுடன், நோய் பரவும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் சாலை பணிகளை உடனடியாக துவங்க வேண்டும். சாக்கடை கால்வாய்  அமைத்து, குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED தர்மபுரி நகரில் தடுப்பூசி முகாமில் கூட்டம் அதிகரிப்பு