×

கிராமத்திற்குள் புகுந்த யானைகள்


தர்மபுரி, மார்ச் 7:  மாரண்டஅள்ளி அருகே கிராமத்திற்குள் நுழைந்த 2 யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 யானைகள் மாரண்டஅள்ளி அருகே நேற்று அதிகாலை 5 மணிக்கு பூவத்தி கிராமத்தில் நுழைந்த யானைகள் மதகேரி, ஜிட்டாண்டஅள்ளி, கதிர்புரம், சிஎம்.புதூர் கிராமத்திற்குள் புகுந்தது. தகவலறிந்த விவசாயிகள் காலையில் தோட்டத்திற்கு செல்லாமல் அச்சத்தில் வீட்டுக்குள் முடங்கினர். இதையடுத்து, தகவலறிந்து வந்த பாலக்கோடு வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் வெயில் கொளுத்தியதால், யானைகள் இரண்டும், பெல்ரம்பட்டி மலைக்குன்றில் ஏறி, அங்குள்ள முள்புதரில் மறைந்து நின்றது. வனத்துறையினர் யானைகள் மீண்டும் கிராமத்திற்குள் வராமல் இருக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு வனத்துறையினர் பட்டாசு வெடித்து, யானைகளை ஈச்சம்பள்ளம், கரகூர் வழியாக வனப்பகுதிக்குள் விரட்டினர். விளைநிலங்களின் வழியாக யானைகள் சென்றதால் பயிர்கள் சேதமடைந்தது.

Tags :
× RELATED தர்மபுரி நகரில் தடுப்பூசி முகாமில் கூட்டம் அதிகரிப்பு